எடையை அதிகரிக்கும் பருவநிலை மாற்றம்
பருவநிலை மாற்றத்தால் வெப்பநிலை ஆங்காங்கே அதிகரிக்கிறது.
இப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு உடலில் வெப்பம் அதிகரிக்கும்.
இதை சமநிலைபடுத்த அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஆனால் பலரும் அதிகளவில் இனிப்பு கலந்த குளிர்பானம், ஐஸ்கிரீம், உறைந்த இனிப்புகளை தேடும் வாய்ப்பு உருவாகும்.
12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருப்பவர்களை விட, 25 டிகிரி செல்சியசில் இருப்பவர்கள் கூடுதலாக 2 டீஸ்பூன் சர்க்கரை எடுக்க நேரிடும்.
இது உடல் பருமன் அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளதாக சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.