பக்கவாதம் ஏற்பட முக்கிய காரணங்கள் என்ன?

பொதுவாக உடலில் பிளட் பிரஷர் சீராக இருக்க வேண்டும். இது அதிகமானால், மூளையிலுள்ள ரத்த குழாய்கள் வெடித்து விடும்.

எனவே, பிளட் பிரஷர் இருப்பவர்கள், டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்துகளை கட்டாயம் நிறுத்தக்கூடாது.

இதய நாளங்களில் பிரச்னை ஏற்படும் சிலருக்கு, ரத்த ஓட்டத்தில் மாற்றம் ஏற்படுவதாலும், ரத்த குழாய்களில் கொழுப்பு படிந்து ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதாலும், பக்கவாதம் ஏற்படலாம்.

வாய் ஒரு பக்கம் இழுத்தது போன்று, முக அமைப்பில் மாற்றம், சுயநினைவை இழத்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

அறிகுறிகள் தெரிந்த உடன் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் மருத்துவமனையை அணுகுவது முக்கியம்.

தாமதித்தால் ரத்த ஓட்டம் தடைபட்டு, மூளை செல்கள் செயலிழந்து, நிரந்தர பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.