முதுகு வலிக்கான காரணங்களும் தீர்வுகளும்.!
பொதுவாக தசைகளில் ஏற்படும் பிடிப்பு, சுளுக்கு, ரத்தக் கட்டு, நீண்ட நேரம் உட்கார்ந்து இருத்தல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களாலும் முதுகு வலி ஏற்படுகிறது.
முதுகு டிஸ்க் தட்டுகள் வீங்குவதாலும், கிழிந்தாலும் முதுகெலும்பில் உள்ள மூட்டுக்கள் பாதிப்பதாலும் வலி வரும். சிறுநீரக கற்கள், அலர்ஜி ஆகியவற்றாலும் ஏற்படுகிறது.
அதிக எடை தூக்குவோர், மூட்டை தூக்குவோருக்கு, இந்த பாதிப்பு வரும். நீண்ட தூரம் வாகனத்தில் பயணம் செய்வோருக்கு வலி வரும்.
கம்ப்யூட்டர் அதிகம் பார்ப்பதால், தண்டு வடத்தை தாங்கிப் பிடிக்கும் தசைகள், பலவீனம் அடையும். இதன் காரணமாக, எலும்பு, நரம்பும் பாதிக்கப்பட்டு வலி வரும்.
வயதானவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது இயல்பு தான்; 35 வயது ஆனாலே, எலும்பு தேய்மானம் வந்து விடுவதால், வயது ஆக ஆக, முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
சோயா பீன்ஸ், ஆப்பிள், திராட்சை, பப்பாளி மற்றும் இறால் போன்றவற்றை, உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
எளிய உடற்பயிற்சிகள் செய்வது, எலும்புகளுக்கு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும்.
கார்களில் நீண்ட தூர பயணம் செய்வோர், இடுப்பில், 'பெல்ட்' அணிவது நல்லது.
சூரிய உதயம், சூரிய அஸ்தமன (காலை, மாலை) நேரங்களில், உடலில் சூரிய ஒளி படும்படி நிற்பது நல்லது. இதன்மூலம் விட்டமின்-டி கிடைக்கும் எலும்புகள் பலம் பெறும்.