அமைதியே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கைகொடுக்கும்... இன்று உலக அமைதி தினம்
இரண்டாம் உலகப்போரின் உச்சகட்டத்தில் ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டுகள் போடப்பட்டு பேரழிவைச் சந்தித்த போதுதான் அமைதியின் தேவையை, நிதர்சனத்தை ஜப்பான் உணர்ந்தது.
மற்ற உலகநாடுகளும் உணர்ந்தன. இதன் விளைவாக 1945 அக்டோபரில் உலக அரசுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா.சபை அமெரிக்க மண்ணில் உருவாக்கப்பட்டது.
நாடுகளிடையே போர், வன்முறை ஏற்படுவதை தடுப்பது, அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் ஐ.நா., சார்பில் செப்., 21ல் உலக அமைதி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
'அமைதியான உலகிற்காக தற்போதே செயல்படுதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
உலக நாடுகளிடையே போர், வன்முறை ஏற்படுவதை தடுத்து சண்டை சச்சரவுகளை தீர்த்து, உலகில் அமைதியை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.
வறுமை, கல்வியின்மை, பாலியல் வன்முறைகள், சர்வாதிகாரம், லஞ்சம், விழிப்புணர்வின்மை போன்றவற்றிலிருந்து விடுபடுவது தான் மக்களுக்கு அவசியம்.
அமைதியான, ஏற்றத்தாழ்வில்லாத உலகைப் படைத்திட இந்த உலக அமைதி தினத்தில் உறுதியேற்போம்.