பீன்ஸ் வகைகளில் ஒளிந்திருக்கும் ஆரோக்கியம்

பீன்ஸில் ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ரத்தத்தைச் சுத்தப்படுத்த உதவும்.

பீன்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், ஆரோக்கியமான செரிமானப் பாதையை மேம்படுத்தவும் உதவுகின்றன.

எலும்பு உறுதிக்கு தேவையான அளவு கால்சியத்தை பீன்ஸ் வழங்க உதவுகிறது. இவற்றைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்றுநோய் மற்றும் அதன் வளர்ச்சியைத் தடுக்கலாம்.

சைவ உணவு உண்பவர்களுக்கு, சாதத்துடன் பீன்ஸை சேர்த்துச் சாப்பிடும் போது உடலுக்குத் தேவையான புரதத்தின் முழு அளவை வழங்குகிறது.

பீன்ஸ் குடும்பத்தில் வடிவங்கள், அளவுகள், நிறங்கள் மற்றும் சுவைகள் ஆகியவற்றில் வேறுபாடுகள் இருந்தாலும், அனைத்தும் ஒரே ஊட்டச்சத்து கலவையே கொண்டுள்ளது.