கர்ப்பப்பை வாய் கேன்சருக்கான தடுப்பூசி குறித்து அறிவோமா!

கர்ப்பப்பை வாய் கேன்சருக்கான தடுப்பூசி 15 ஆண்டுகளுக்கும் மேலாக நம் நாட்டில் நடைமுறையில் உள்ளது.

'ஹெச்பிவி -ஹியூமன் பேப்பிபிலோமா' வைரஸ் தொற்று ஏற்படுவதால் கர்ப்பப்பை வாய் கேன்சர் பாதிப்பு வருகிறது.

தொற்று ஏற்பட்டு, கேன்சராக மாறுவதற்கு 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆகலாம்.

இந்த வைரசில் 20க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இவற்றில் நான்கைந்து வகை வைரஸ், கேன்சர் உண்டு பண்ணும் ஆபத்தானவை.

எல்லா கேன்சர் போலவே இதற்கும் 'ரேடியேஷன், கீமோதெரபி' அறுவை சிகிச்சையால் -70 சதவீதம் குணம் பெறும் வாய்ப்பு உள்ளது.

தொற்று ஏற்படுவதற்கு முன் தடுப்பூசி போட்டால், கர்ப்பப்பை வாய் கேன்சர் வராமல் 99 சதவீதம் தடுக்க முடியும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

கார்டாசில், செர்வேரிக்ஸ் என்ற இரண்டு வகை தடுப்பூசிகள் நம் நாட்டில் உள்ளன.

இரண்டொரு நாட்களுக்கு வலி இருக்கும்; காய்ச்சல் இருக்கும். உடம்பின் எதிர்வினை தான் இது. மற்றபடி எந்த பக்க விளைவும் இருக்காது என கூறப்படுகிறது.