வயது முதிர்வை தடுக்கும் கருங்குறுவை...!
கருங்குறுவை அரிசி பழங்கால அரிசி வகைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
சாகுபடி செய்த நாட்களிலிருந்து 120-125 நாட்களில் அறுவடைக்கு வரும், இந்த அரிசி ரகம் சிவப்பு மற்றும் கருப்பு கலந்த நிறத்தில் இருக்கும்.
கருங்குறுவை அரிசியில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ,பி,பி12,கே, புரதச்சத்து மற்றும் மாவுச்சத்து உள்ளது.
கருங்குறுவை அரிசியில் உணவு சமைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும்.
பெண்கள் மகப்பேறு அடைய இந்த அரிசி பெரிதும் உதவுகிறது.
இந்த அரிசியை தொடர்ந்து உணவாக எடுத்துக்கொள்ளும் போது, யானைக்கால், காலரா நோய் வராமல் தடுப்பதாக கூறப்படுகிறது.