'தல' தோனியா...'கிங்' கோஹ்லியா

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடக்கும் பிரிமியர் கிரிக்கெட் லீக் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

சென்னை கேப்டன் தோனிக்கு தொடர் துவங்கும் முன்பே, முழங்காலில் வலி ஏற்பட்டது. இதையும் தாண்டி நான்கு போட்டியில் பங்கேற்றார்.

லக்னோவுக்கு எதிரான போட்டியில் வலி அதிகமானதால் இன்று களமிறங்குவது கடைசி கட்டத்தில்தான் தெரிய வரும். ஒருவேளை இவர் 'லெவன்' அணியில் இடம்பெறவில்லை எனில் அணிக்கு பின்னடைவுதான்.

சென்னை அணிக்கு ருதுராஜ் (197 ரன்), கான்வே (98), ரகானே (92) என 'டாப் ஆர்டர்' பேட்டர்கள் அசத்துகின்றனர். 'மிடில் ஆர்டர்' பலவீனமாக உள்ளது.

சென்னை அணிக்கு காயம் பெரும் தொல்லையாக மாறி உள்ளது. இதனால் 'சுழல்' நாயகன் ஜடேஜா மீண்டும் அசத்தினால் வெற்றிப்பாதைக்கு திரும்பலாம்.

பெங்களூரு அணிக்கு கேப்டன் டுபிளசி (197 ரன்), கோஹ்லி (214) மிரட்டல் 'பார்மில்' உள்ளனர். மேக்ஸ்வெல் பலம் சேர்க்கிறார். அனுபவ கீப்பர் தினேஷ் கார்த்திக் 4 போட்டியில் 10 ரன் மட்டும் எடுத்து சோதிக்கிறார்.