இமைகள் அடிக்கடி துடிப்பது ஏன்? காரணமும், தீர்வுகளும்!!

மூளை மற்றும் நரம்பியல் குறைபாடுகள் காரணமாகவும் அரிதாக சிலருக்கு கண்கள் துடிக்கும் பிரச்னை ஏற்படலாம். மருத்துவர்கள் அதை ப்ளெபரோஸ்பாசம் என அழைப்பர்.

இமைகள் துடிப்பது என்பது 40 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்.

அல்லது அதிக வேலைப்பளுவின் காரணமாக தசைச்சோர்வு ஏற்பட்டு இம்மாதிரியாக கண் இமை அதிகம் துடிப்பது ஏற்படும்.

கண்களில் சாதாரண பார்வை திறனை தவிர கூடுதலாக பவர் உள்ளதா, அழுத்தம் உள்ளதா என பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

ஊட்டச்சத்து பற்றாக்குறை காரணம் என்று தெரிந்தால் அதற்கேற்ப வைட்டமின் மாத்திரைகளையும் கண்களுக்கான பயிற்சிகளையும் பெறவேண்டும்.

மிகவும் லேசான கண் துடிப்பு என்றால் தானாகவே சரியாகிவிடும். அடிக்கடி ஏற்பட்டால் டாக்டரை பார்த்து, பரிசோதனை செய்வது அவசியம்.

குறிப்பாக அது கண் தொடர்பான பாதிப்பா அல்லது மூளை மற்றும் நரம்பு மண்டலம் தொடர்பான பாதிப்பா என அறிந்து கொண்டு சிகிச்சை பெறலாம்.