ஹெல்த்தியான ராகி பிஸ்கட் செய்யலாம் வாங்க!

4 ஏலக்காயுடன் 1/2 கப் நாட்டுச் சர்க்கரை சேர்த்து பவுடர் போல் அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் 1 கப் ராகி மாவு, ஏலக்காய் மற்றும் சர்க்கரை பொடி சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வறுக்கவும்.

வறுத்த ராகி மாவு ஆறிய பின் ஒரு பவுலில் மாற்றிக் கொண்டு, 1 முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக பிசையவும்.

2 இன்ச் அளவு இடித்த இஞ்சியுடன், 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர், 1/2 கப் எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

இதை பேக்கிங் ட்ரேயில் பிடித்தமான வடிவத்தில் தட்டி வைக்கவும்.

பின்னர், பேக்கிங் ட்ரேயை 180c வெப்பநிலையில் 8 நிமிடத்துக்கு வைத்து பேக் செய்தால், ஹெல்த்தியான, சுவையான ராகி பிஸ்கட் ரெடி.