பிங்க் பிளேஸரில் ஸ்டைலிஷ் அனன்யா பாண்டே!

பாலிவுட் நடிகையான அனன்யா பாண்டே 'லைகர்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பரிட்சயமாகியுள்ளார்.

விதவிதமான உடைகளில் கலக்கும் இவர், சோஷியல் மீடியாவில் அடிக்கடி தன் புகைப்படங்களை பதிவிட்டு, ரசிகர்களை கவர்கிறார்.

சமீபத்தில், அடர் பிங்க் நிற பிளேஸரில் அசத்தலான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில், பிளேஸரின் நிறத்திலேயே லெக்கின்ஸ், இடுப்பில் டை -நாட் என அணிந்திருந்தார்.

ஹேண்ட் பேக்குக்கு பதிலாக வைரங்கள் பதிக்கப்பட்ட ஹேண்ட் பக்கெட் பை கைகளில் அழகாக தவழ்கிறது.

படிய வாரிய தலையில் சிறு கொண்டை, ரோஜா நிற கன்னங்கள் மற்றும் பிங்க் நிற லிப்ஸ்டிக் என மாடர்ன் 'பார்பி' லுக்கில் அசத்தினார்.

அவ்வப்போது பிங்க் நிறத்தில் பேஷனை தொடரும் அனன்யா பாண்டே இந்த பாடிகான் கவுனில், தோற்றத்தை மெருகேற்றி 'பார்பி' ஸ்டைலில் இணைந்துள்ளார்.