நட்புன்னா என்ன? வள்ளுவர் கூறுவதை கேட்போமா?

உலகப்பொதுமறையான திருக்குறளில் நம் வாழ்க்கைக்கு தேவையான ஏராளமான உதாரணங்கள் கொட்டிக் குவிந்துள்ளன.

இதில், நட்பு என்றால் என்ன? நட்பு என்னென்ன செய்யும்? என்பது உட்பட பல்வேறு கருத்துகளை நட்பியல்' பகுதியில் விளக்கியுள்ளார்.

பிறை, நாளும் வளர்வதுபோல, அறிவுடையார் நட்பு வளரும்; முழு நிலவு தேய்வது போலப் பேதைகளின் நட்பு தேயும்.

பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.

பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு.

நம் பகைவர் நம்முடன் நண்பராக வாழும் காலம் வந்தால், நாமும் அவருடன் முகத்தால் நட்புக் கொண்டு மனத்தால் அந்நட்பை விட்டுவிட வேண்டும்.