50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான ஹெல்த் டிப்ஸ்...!

50 வயதில் தான் மாதவிடாய் நிறுத்தம், குறைந்த எலும்பு அடர்த்தி, தூக்க முறை மாற்றங்கள், மெதுவான இதய துடிப்பு, பலவீனமான சிறுநீர்ப்பை, செரிமான பிரச்சனைகள் போன்ற பல்வேறு மாற்றங்களுக்கு ஒரு பெண்ணின் உடல் உள்ளாகிறது.

ஆரோக்கியமான உணவுமுறை இதய நோய், நீரிழிவு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்.

நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது யோகா போன்ற வாரத்தின் பெரும்பாலான நாட்களில் குறைந்தபட்சம் 30 நிமிட மிதமான தீவிர உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது அவசியம்.

50 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் தூக்க பிரச்னைகள் மிகவும் பொதுவானவை. ஓய்வெடுக்கும் படுக்கை நேரத்தை உருவாக்குதல், மது மற்றும் காஃபினைத் தவிர்ப்பது, தூங்குவதற்கு வசதியான சூழலை உருவாக்குதல் போன்றவை கடைப்பிடிப்பது அவசியமாகும்.

நாள்பட்ட மன அழுத்தம் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும். மன அழுத்தத்தைக் குறைக் தியானம், ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள், யோகா ஆகியவற்றை முயற்சி செய்யலாம்.

மேமோகிராம்கள், எலும்பு அடர்த்தி சோதனைகள் மற்றும் கொலஸ்ட்ரால் சோதனைகள் போன்ற வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்வது அவசியமாகும்.