தாய்ப்பால் தரத்தை அதிகரிக்கும் எள் - தாய்மார்களே அவசியம் எடுத்துக்கோங்க..!
இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம்,
பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் ஏ,
பி போன்றவை உள்ளன.
எள்ளை பொதுவாக எண்ணெய் எடுப்பதற்கும்,
உணவுப்பொருட்களை அலங்கரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
எள் விதைகளில் ஆரோக்கியமான புரதங்கள் நிறைந்துள்ளன, இது உடலின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது.
எள் விதைகளில் மெத்தியோனைன் மற்றும் டிரிப்டோபான் உள்ளது. இது கல்லீரலை
ஆரோக்கியமாக வைத்திருக்கவும், நல்ல தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
கருப்பு மற்றும் சிவப்பு எள் விதைகளில் இரும்புச்சத்து உள்ளது. அதே சமயம்
வெள்ளை எள்ளில் கால்சியம் நிறைந்துள்ளது. அவை இரத்த சோகையைத் தடுக்க
உதவுகின்றன.
எள் விதைகளில் லெசித்தின் அதிகமாக உள்ளதால், இது நினைவாற்றலை அதிகரிக்க
உதவுகிறது மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பாலின் தரத்தை
மேம்படுத்துகிறது.
எள்
அனைத்து விதமான இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.
குறிப்பாக கருப்பு எள்ளினை அதிகளவில் எடுத்துக் கொண்டால், உடலில்
இரும்புச் சத்து அதிகரிக்கும்.
ஒரு கப் பாலில்
உள்ள கால்சியம் அளவிலான சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளது. பால் சாப்பிட
முடியாதவர்கள் எள்ளு மிட்டாய் சாப்பிட்டாலே தேவையான கால்சியம் உடலுக்கு
கிடைத்து விடும்.