மருத்துவ குணங்கள் மிக்க விதைகள் சில..!

பூசணி விதைகளில் நார்ச்சத்து, புரதம், இரும்பு மற்றும் வைட்டமின் ஈ உட்பட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.

முருங்கை விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ, பி, சி உட்பட பல்வேறு சத்துக்கள் உள்ளன. புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்க, ரத்தசோகையை நீக்க உதவும்.

சப்ஜா விதைகள் உடல்சூடு, செரிமானப் பாதையில் ஏற்படும் புண்கள் ஆகியவற்றை குணப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.

சூரியகாந்தி விதைகளில், நியாசின், வைட்டமின் ஈ உட்பட பல சத்துகள் நிறைந்துள்ளன. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

வெள்ளரி விதைகள் வறட்சியைப் நீக்கி, சருமத்தைப் பளபளப்பாக மாற்றவும், கூந்தல் வளர்ச்சிக்கும் உதவும்; புற்றுநோயைத் தடுக்கும்; நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் பாதிப்புகளிலிருந்து எள் விதைகள் பாதுகாக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைக்கவும் உதவும்.