இளநரைக்கு குட்-பை சொல்ல வீட்டிலேயே இருக்கு மருந்து!
வெங்காயத்தை மிக்ஸி கிரைண்டரில் அரைத்து சாறு எடுத்து தலையில் தடவி காய்ந்ததும், லேசான ஷாம்புயை கொண்டு தலைமுடியை கழுவி வந்தால் நரை முடி பிரச்னை வராமல் தடுக்கலாம்.
நெல்லிக்காய் மற்றும் ரீத்தா பொடியை ஒரு இரும்பு பாத்திரத்தில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் எழுந்ததும் தலைமுடியில் தடவி உலர்ந்த பின் சுத்தமான தண்ணீரில் கழுவி வந்தால் நரைமுடி பிரச்னையை தடுக்கலாம்.
கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி பிரச்னையை தடுக்கலாம்.
கற்றாழை ஜெல்லை முடியின் வேர்களில் மசாஜ் செய்து உலர்ந்த பின் ஷாம்பு
போட்டு கழுவவும். இதை வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்துவந்தால் கூந்தல்
படிப்படியாக கருமையாக வர ஆரம்பிக்கும்.