மாரடைப்பால் அதிகம் பாதிக்கப்படும் பெண்கள்: ஆய்வில் தகவல்
ஆண்களை விட மாரடைப்பால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
1995 - 2014 வரையிலான காலத்தில், 35 - 54 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மாரடைப்பு அபாயம் 21ல் இருந்து 31 % ஆக அதிகரிப்பு.
ஆனால், ஆண்களுக்கு 30ல் இருந்து 33 % ஆக மட்டுமே அதிகரித்துள்ளது.
பெண்களுக்கு வழக்கமான மார்பு வலியுடன் கூடுதலாக வாந்தி, தாடை வலி, வயிற்று வலி போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.
இதை கவனிக்க பெண்களோ, டாக்டரோ தவறும்பட்சத்தில், சிகிச்சை பெறுவது தாமதமாகிறது.
முன்கூட்டிய மாதவிடாய், எண்டோமெட்ரியோசிஸ், கர்ப்பக்கால உயர் ரத்த அழுத்தக் கோளாறுகள் ஆகியவை மாரடைப்புக்கான காரணங்களாகும்.