அஷ்வின் மீண்டும் 'நம்பர்-1': டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம்...

டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது.

பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 870 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்து மீண்டும் 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார்.

சமீபத்தில் தனது 100வது டெஸ்டில் பங்கேற்ற அஷ்வின், இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட் கைப்பற்றினார்.

தவிர 2வது இன்னிங்சில் 5 விக்கெட் கைப்பற்றிய இவர், 36வது முறையாக ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்தி, கும்ளேவை (35) முந்தினார்.

முதலிடத்தில் இருந்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 847 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் (847 புள்ளி) 4வது இடத்தில் இருந்து 2வது இடத்தை பும்ராவுடன் பகிர்ந்து கொண்டார்.

குல்தீப் யாதவ், 31வது இடத்தில் இருந்து 16வது இடத்துக்கு முன்னேறினார்.

இந்திய கேப்டன் ரோகித் சர்மா (751) 11வது இடத்தில் இருந்து 6ம் இடத்துக்கு முன்னேறினார்.

'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (444), அஷ்வின் (322) முதலிரண்டு இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.