உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களை கர்ப்பிணிகள் சாப்பிடுவதால்... !
உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ்களில் வைட்டமின் ஏ, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம் மற்றும் செலினியம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
கர்ப்பகாலத்தில் இதை சாப்பிடும் போது மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது.
கர்ப்பிணிகளின் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கிறது.
குழந்தையின் பற்கள், நரம்புகள் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், தசைக் கட்டுப்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.
பிரசவத்தை எளிதாக்குவதுடன், குழந்தைப்பேறுக்கு பின் ஏற்படும் ரத்தப்போக்குக்கான வாய்ப்பையும் குறைக்கக்கூடும்.
குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற அபாயத்தைக் குறைக்க உதவும்.
அதேவேளையில், ஒரு நாளுக்கு 100 கிராமுக்கு மேல் உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ்கள் சாப்பிடக்கூடாது என்பது டாக்டர்களின் அட்வைஸாக உள்ளது.