கர்ப்பப்பைவாய் புற்றுநோய் காரணமும், அறிகுறியும் அறிவோமா…

கருப்பை வாயின் செல்களில் - யோனியுடன் இணைக்கும் கருப்பையின் கீழ்ப் பகுதியில் ஏற்படுவது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய். ஹ்யூமன் பாபிலோமாவைரஸ் (Human papillomavirus-HPV ) தான் இப்புற்றுநோய் வருவதற்கு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது.

150-க்கும் மேற்பட்ட ஹெச்.பி.வி வைரஸ் வகைகள் உள்ளன. ஆனால் இரண்டு வைரஸால் மட்டும் 70 சதவிகிதப் புற்றுநோய் ஏற்படுவதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகமாக வெள்ளைப்படுதல், அவை புழுப்பு நிறத்தில் இருத்தல் இதன் முக்கியமான அறிகுறி. மேலும் உடலுறவில் ஈடுபடும்போது பெண்களுக்கு ரத்தம் வந்தால், உடனடியாக கர்ப்பப்பைவாய் புற்றுநோய் இருக்கிறதா என்று சோதனை செய்ய வேண்டும்

மாதவிடாயின்போதும் அதிக ரத்தம் வெளியேறும். அதிக எடை இழப்பும் புற்றுநோயின் ஒரு அறிகுறி.

வலிகளும் இதன் அறிகுறிகளே. உடலுறவின்போது கடுமையான வலி, மேலும் அடிக்கடி இடுப்பு, முதுகு, கால்களில் கடுமையான வலி உண்டாகும்.

ஹெச்பிவி வைரஸ், பெண்களின் கர்ப்பப்பைவாய்ப் பகுதியில் ஒட்டிக்கொண்டு, அந்தப் பகுதியில் ஏற்படும் காயங்களை குணமாகவிடாமல், புற்றுநோயை உண்டாக்கும்.

இந்தப் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்துவிட்டால் குணப்படுத்திவிடலாம். இந்த அறிகுறிகளை பெண்கள் கவனிக்கும் பட்சம், உடனடியாக கர்ப்பப்பைவாய் புற்றுநோய் இருக்கிறதா என்று சோதனை செய்ய வேண்டும்.