இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

ஒருநாள் தொடரின் முதல் போட்டி லண்டன், ஓவல் மைதானத்தில் இன்று நடக்கிறது.

இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி துவக்கம் தரலாம்.

சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத போதும், ஐ.பி.எல்., அனுபவம் தவானுக்கு கைகொடுக்கும்.

மிடில் ஆர்டரில் வழக்கம் போல கோஹ்லி... டி20 போட்டியில் தடுமாறிய இவர் மீண்டு வருவார் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

மூன்றாவது டி20ல் சதம் விளாசிய சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் இடம் பெற உள்ளனர்.

பின் வரிசையில் ரிஷாப் பன்ட், ஹர்திக் பாண்ட்யா இடம் பெறவுள்ளனர்.

பந்துவீச்சை பொறுத்தவரையில் முகமது ஷமி திரும்பியிருப்பது அணிக்கு பலமாகவுள்ளது. இவருக்கு பும்ரா கைக் கொடுக்கலாம்.