அப்பாடா.. தப்பிச்சாச்சு.. ரிலாக்ஸான சச்சின்...!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை உலகளவில் பிரபலப்படுத்தியவர்; சாதனைகள் ஏராளம்.

போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், கிரிக்கெட் தொடர்பான பணிகளில் இன்னமும் 'பிஸி'யாக உள்ளார்.

தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சச்சின், அங்கு இயற்கை அழகை ரசிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்.

ஸ்காட்டிஷ் மலைப்பகுதிகளை சுற்றிப்பார்த்து 'ரிலாக்ஸ்' செய்யும் சச்சின்.

நகர வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து ஓய்வெடுக்கவும், தப்பிக்கவும் இது சரியான இடம் என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.