சுப்மன், ருதுராஜ் அரை சதம்: இந்திய அணி அசத்தல் வெற்றி
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முகமது ஷமி 'வேகத்தில்' அதிர்ந்தது. அவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 276 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட்
அசத்தல் துவக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 142 ரன் சேர்த்தனர்.
ஆஸ்திரேலிய பந்துவீச்சை புரட்டி எடுத்த இவர்கள் பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர். ருதுராஜ் 60 பந்திலும், சுப்மன் 37 பந்திலும் அரைசதம் அடித்தனர்.
ராகுல், சூர்யகுமார் பொறுப்பாக விளையாடி, அணியை கரை சேர்த்தனர். சூர்யகுமார்(50) அரைசதம் எட்டினார்.
அபாட் ஓவரில் வரிசையாக ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்த ராகுல், வெற்றியை உறுதி செய்தார்.
இந்திய அணி 48.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 281 ரன் எடுத்து வெற்றி பெற்றது.