மழையில் நனைந்தாலேயே காய்ச்சல் வருமா? தவிர்ப்பது எப்படி?
மழை நனைவதால் சளி, காய்ச்சல், தலைவலி, தும்மல் என பல உடல் உபாதைகள் வரும் என பெரும்பாலும் கூறப்படுகிறது.
அதுவும் முதல் மழையில் நனைந்தால் கண்டிப்பாக பாதிப்பு வரும் என பெரியவர்கள் கூறுவர். மழைக்காலங்களில் பொதுவாகவே இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதைப் பார்க்க முடியும்.
இக்காலத்தில் தட்பவெப்பநிலை குறைந்து, குளுமையான சூழல் நிலவும். உடலின் வெப்பநிலையும் குறைந்து காணப்படும். இதுவே பாதிப்பு வருவதற்கான முக்கிய காரணம்.
நம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தொற்றுகள் பாதித்தால் நோய் தாக்கும் சூழலை உருவாக்கிவிடும். இதனால் தான் எதிர்ப்பு சக்திக் குறைவாக இருப்பவர்களுக்கு உடனே சளி, காய்ச்சல் ஏற்படுகிறது.
மழையில் நனைந்தாலும் அதிகநேரம் உடல் குளிர்ந்த நிலையில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தலையை முதலில் நன்கு உலர்த்த வேண்டும்.
மழையில் நனைய நேரிட்டால், வீடிற்கு வந்ததும் வெது வெதுப்பான நீரில் சோப்பு தேய்த்து குளித்து உடை மாற்ற வேண்டும்
இந்த பருவத்தில் வீட்டில் குழந்தைகள், பெரியவர்கள் இருந்தால் கட்டாயம் நீரை கொதிக்க வைத்து பருக வேண்டும்.
நார்சத்து, விட்டமின் ஏ, சி கொண்ட பழங்கள், கிரீன் டீ, காய்கறி சூப் , இஞ்சி டீ போன்ற சுடு பானங்களை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.