சீரற்ற ஹார்மோன் செயல்பாடு எப்படி ஏற்படுகிறது என அறிவோமா!!

பி.சி.ஓ.எஸ்., எனப்படும் நீர்க்கட்டி, பைப்ராய்டு என்கிற சதைக்கட்டி, எண்டோமெட்ரியம் என்ற கர்ப்பப்பையின் வெளிப்புறச் சுவரில் கோளாறு போன்றவை 10ல் ஒன்பது பெண்களுக்கு உள்ளன.

இதற்கு முக்கிய காரணம், ஹார்மோன் சமச்சீரற்ற தன்மை என்பது அனைவருக்கும் தெரிந்தாலும், எப்படி என்பது புரிவதில்லை.

வளர்சிதை மாற்றத்திற்கு காரணமான தைராய்டு, மாதவிடாய் வருவதற்கு காரணமான ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன்களை மன அழுத்தத்தை குறைக்கும் பணிக்கு உபயோகித்துக் கொள்ளும்.

மனது பாதித்தால் அது உடலையும் பாதிக்கும். மன அழுத்தம் அதாவது ஸ்ட்ரெஸ் இருந்தால், இதயம் வேகமாக துடிக்கும்; மூச்சிரைக்கும்; ரத்த அழுத்தம் அதிகரிக்கும்; ரத்த சர்க்கரை அளவு கூடலாம்.

எல்லா நேரமும் மன அழுத்தத்தில் இருந்தால், அதீத உடல் செயல்பாடுகளை குறைக்க, அதிக அளவில் கார்ட்டிசால் சுரக்கும். இதனால் மற்ற ஹார்மோன்களை துணைக்கு வலுக்கட்டாயமாக இழுக்கும்.

இயல்புக்கு மாறான இந்த செயல்பாடுகளை இயல்பாக மாற்றுவதற்கு, அட்ரினலின் என்ற சுரப்பியில் இருந்து கார்ட்டிசால் என்ற ஹார்மோன் அதிக அளவில் சுரக்கும்.

இதனால் தான் ஹார்மோன் சமச்சீரற்ற தன்மை உருவாகிறது என கூறப்படுகிறது.