குழந்தைக்கு ஒரு வயதாகியும் பால்பற்கள் வளராவிட்டால் என்ன செய்வது?

குழந்தைகளுக்கு ஆறு மாதத்தில் இருந்து இரண்டரை வயதிற்குள் பால்பற்கள் வளரும்.

ஆறு வயதில் இருந்து 12 வயது வரை பற்கள் விழுந்து முளைக்கும்.

18 வயது வரை பற்கள் விழுந்து சீராக முளைப்பதால் தெத்து பற்கள் வளர்வது தவிர்க்கப்படும்.

குறிப்பிட்ட காலத்திற்குள் பால் பற்கள் முளைக்கவில்லை என்றால் மரத்திலான கடிக்கும் பொருட்களை கொடுக்கலாம்.

இதை குழந்தைகள் நன்றாக கடிக்கும் போது பால் பற்கள் முளைத்து வளரும்.

குறிப்பிட்ட காலத்திற்குள் பற்கள் வளராமல் இருந்தால் கால்சியம் குறைபாடாகவும் இருக்கலாம். டாக்டரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.