ரொனால்டோ டாட்டூ குத்திக் கொள்ளாததற்கு உருக்கமான காரணம் உண்டு!

விதவிதமான டிசைன்களில் டாட்டூ என்ற பச்சை குத்திக் கொள்ளுதல், இப்பொழுது இளைஞர்கள் மத்தியில் ஃபேஷன் ஆகிவிட்டது.

சாதாரண மக்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் டாட்டூ குத்தியிருப்பர்; குறிப்பாக, விளையாட்டு வீரர்கள் தங்களின் உடலில் மெகா சைஸ் டாட்டூஸ்களுடன் உற்சாகமாக விளையாடுவர்.

டாட்டூ குத்துவது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. உலகில் பல்வேறு பகுதிகளிலும் பழங்காலத்தில் இருந்ததே காணப்படும் ஒரு முறை தான் இது.

கை, மார்பு பல்வேறு இடங்களில் தங்களின், அன்புக்குரியவர்களின் பெயர்களையோ, ஓவியங்களையோ டாட்டூவாக குத்திக் கொள்வர். உடல் முழுக்கவும் சிலர் குத்திக்கொள்வர்.

இதில், பத்தில் ஒருவருக்கு தோல் புற்றுநோய், அலர்ஜி மற்றும் எச்.ஐ.வி., உட்பட பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.

இந்நிலையில், பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உடம்பில் எந்த ஒரு இடத்திலும் டாட்டூ குத்தியிருக்க மாட்டார். காரணம் தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

ரொனால்டோவுக்கு ரத்த தானம் செய்யும் பழக்கம் உள்ளது. உடலில் டாட்டூ குத்தியிருந்தால் ரத்த தானம் அளிக்க முடியாது என்பதால், இவர் டாட்டூ குத்தாமல் உள்ளார்.

ரத்த தானம் மட்டுமின்றி ஏராளமான சமூக சேவைகளிலும் ரொனால்டோ ஈடுபட்டுள்ளார். இவரின் தொண்டு உள்ளத்தால் பல உயிர் காப்பாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.