வறண்ட பாதங்களை மென்மையாக்க டிப்ஸ் டிப்ஸ்...
நம்மை அழகுபடுத்த பல விதமாக முயற்சி செய்கிறோம். ஆனால் இந்த அழகு படுத்தும் முயற்சியில் முகத்துக்கு மற்றும் தலை முடிக்கு கொடுக்கும் கவனத்தை பாதங்களுக்கு கொடுப்பதில்லை.
குளிகாலத்தில் பாதங்களில் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்னை வறண்டு போவது. இதற்கான தீர்வை இப்போது பார்க்கலாம்.
பாதங்களை கழுவியவுடன், காய வைத்து, சிறிதளவு மாய்ஸ்சரைசர் தடவுங்கள். இதனால் கால் பாதங்களுக்கு ஈரப்பதம் கிடைக்கும்.
விரல்களுக்கு இடையில் இதை தடவ வேண்டாம். இவை பாக்டீரியாக்கள் நுழைய வழி வகுக்கும்.
பாதங்கள் வறண்டு காணப்படும்போதும், பாதங்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும்போது வெடிப்புகள் ஏற்படலாம்.இதை தடுக்க, குளிக்கும் போது படிக கல்லை கொண்டு பாதங்களை உரசலாம்.
பாத அரிப்பிற்காக சொரிவதால் தோலில் வெடிப்பு ஏற்படும். வெடிப்பு, நோய் தொற்றுக்கு வழி வகுக்கும். எண்ணெய் அல்லது கிரீம்களை தடவி கொண்டே இருப்பது அரிப்பை கட்டுப்படுத்தும்.