குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை தவிர்க்க !

குழந்தைகளுக்கு விரல் சூப்பும் பழக்கம் 1.5 வயது வரை இருந்தால் பயம் தேவையில்லை. 2 வயதானதும் தானாகவே இந்த பழக்கத்தை மறந்து விடுவர்.

எந்த ஒரு பழக்கமும் 2 வயதிற்கு மேல் தொடரக்கூடாது.

விரல் சூப்புவது கெட்ட பழக்கம் என்ற எண்ணத்தை குழந்தையிடம் பொறுமையாக சொல்ல வேண்டும். ஒவ்வொரு முறையும் இதை நினைவுபடுத்தவும்; கோபப்பட்டு திட்டுவது, அடிப்பது கூடாது.

இப்பழக்கத்தை விட்டு விட்டால் சிறு சிறு பரிசுகள் தந்து ஊக்குவிக்கலாம்.

குழந்தைகளை தனியாக அமைதியாக இருக்க விடாமல், கையில் பொம்மை வைத்து விளையாடுவது, ஓவியம் வரைய வைப்பது என ஏதாவது வேலைகளில் ஈடுபடுத்திக் கொண்டே இருக்கவும்.

விரல் சூப்பும்போது குழந்தையை கண்ணாடி முன் நிறுத்தி, 'பார்க்க எவ்வளவு அசிங்கமாக உள்ளது பார்; மற்றவர்கள் பார்த்தால் எப்படி இருக்கும்' என கூறினால் படிப்படியாக மாறுவர்.

இப்பழக்கம் அதிகமாக இருந்தால், கையை மடக்க முடியாதவாறு 'ஏஸ் பான்டேஜ்' பயன்படுத்துவது அல்லது மிளகுத்துாள், விளக்கெண்ணெய் போன்ற கசப்பான பொருட்களை விரலில் தடவி விடலாம்.

விரல் சூப்பும் பழக்கம் ஆரம்ப நிலையில் உள்ள குழந்தைகளுக்கு இவை உதவக்கூடும்.

6 - 7 வயதிலும் தீவிரமாக இப்பழக்கம் தொடர்ந்தால், முன்புற பற்கள் துருத்திக் கொண்டு வளரக்கூடும் என்பதால், பல் மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.