மூட்டுவலி வராமலிருக்க என்ன வழி?

இளம் வயதிலிருந்தே பால், பால் பொருட்கள், பருப்பு, பயறு வகைகளை அதிகம் சேர்க்க வேண்டும்.

அடர் பச்சைநிறக் காய்கறிகள், கீரைகளைச் சாப்பிட வேண்டும்.

இவற்றிலுள்ள புரதச்சத்து மூட்டுகளில் கொலாஜன் உற்பத்திக்கு உதவுவதால், அங்குள்ள குருத்தெலும்பு தேய்மானம் ஆகாமல் பாதுகாக்கப்படுகிறது.

தினமும் உடலில் சூரிய ஒளி படும்படி நிற்க வேண்டும். சூரிய ஒளி படுவதன் மூலம் தோலின் அடிப்பாகத்தில் வைட்டமின் டி தயாராகிறது. இது எலும்புக்கு பலம் தரக்கூடியது.

சிறு வயதிலிருந்தே நடை, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றில் ஈடுபட்டால் மூட்டுத் திசுக்கள் பலம் பெறும். மூட்டுத் தேய்மானம் ஆவது தள்ளிப்போகும்.

நடக்கும்போது நம் உடல் எடையைப்போல 2 மடங்கு எடையை கால் மூட்டு தாங்குகிறது. உடல் எடை அதிகரித்தால், மூட்டுக்கு அதிகப்படியான வேலை உண்டாகும் என்பதால் சீக்கிரமே தேய்ந்துவிடுகிறது.

எனவே உடல் எடை சரியாக இருந்தால் மட்டுமே மூட்டு வலியைத் தவிர்க்க முடியும்.

முழங்கால் மூட்டுக்கு வலிமை தரக்கூடிய யோகாசனங்களை முறைப்படி செய்து வர மூட்டுவலியைத் தள்ளிப்போடலாம்.