அடிக்கடி உண்டாகும் முதுகு வலிக்கு என்ன செய்யலாம்?
பொதுவாக முதுகு வலியானது இளைஞர்களுக்கும், முதியவர்களுக்கும் வருகிறது.
இளைஞர்களுக்கு முதுகு வலி என்றால் அவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
லோடு மேன், டிரைவர், ஜிம்மில் பயிற்சி பெறுவோர் கடுமையான வேலை செய்வதால் ஜவ்வு தேய்மானம் ஏற்பட்டு வெளியே பிதுங்கி நரம்புகளை அழுத்தும்.
இது போன்ற நேரங்களில் முதுகு வலி இருக்கும். எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பரிசோதனை செய்தால் பாதிப்பு தெரியவரும்.
வெளியே வந்த ஜவ்வை உள்ளே தள்ள முடியாது. மாத்திரைகள் மூலம் சரி செய்யலாம். அப்படி சரி செய்ய முடியாத அளவிற்கு சென்றுவிட்டால் நுண் துளை அறுவை சிகிச்சை செய்யலாம்.
வயதானவர்களுக்கு எலும்பு தேய்மானம் காரணமாக ஜவ்வு வீக்கமடைந்து நகர்ந்து முன் வருவதற்கு வாய்ப்புள்ளது.
இது போன்ற எலும்பு தேய்மானத்தால் வரும் முதுகு வலிக்கு இடுப்பில் பெல்ட் அணிந்து கொள்ளலாம். மாத்திரைகளை உட்கொள்ளலாம்.
60 முதல் 70 சதவீதம் வரை பிசியோதெரபி, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும்.