மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒற்றை தலைவலி..!..
ஒற்றைத் தலைவலி என்பது தலையின் ஒரு பகுதியில் மட்டும் வலி ஏற்படுவதாகும். இது ஒருநாள் அல்லது பல நாட்கள் கூட நீடிக்கக்கூடும்.
கை மற்றும் கால்கள் மரத்துப் போதல், குமட்டல், வயிறு பிரட்டல், அதிக ஒளி அல்லது சத்தம் கேட்டால் தலைவலி அதிகரிப்பது என்பது உட்பட பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.
ஒற்றை தலைவலி மூளையை எவ்வாறு பாதிக்கிறது என அறிவதற்காக, அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலை., ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
'பெரிவாஸ்குலர் இடைவெளி' என்பது மூளையில் அமைந்திருக்கும் ஒரு திரவம் நிறைந்த கட்டமைப்பு ஆகும்.
ஒற்றை தலைவலி உள்ளவர்களுக்கு, பெரிவாஸ்குலர் இடைவெளி சற்றே பெரிதாக காணப்படுவதாக, ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
ஒற்றை தலைவலிக்கான வலி நிவாரணிகள் பரிந்துரைக்கப்பட்டாலும், இதுதொடர்பாக கூடுதல் ஆய்வுகள் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் என்பது டாக்டர்களின் கருத்தாகும்.