பல் துலக்குவதில் கவனம் தேவை
பற்களை சுத்தம் செய்ய தினமும் பல் துலக்குதல் அவசியம். அதேவேளையில், அதற்கான 'டூத் பிரஷ்', கழிப்பறையுடன் கூடிய பாத்ரூமில் இருப்பின் முற்றிலும் தவறான செயல் என ஆய்வுகள் கூறுகின்றன.
ஏனெனில் கழிப்பறையில் உள்ள பாக்டீரியாக்கள், டூத் பிரஷ் மீது படியும்.
இதை பயன்படுத்தும் போது ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும்.
எனவே டூத் பிரஷ்-ஐ, பாத்ரூம்க்கு பதிலாக வேறு அறையில் வைப்பது நல்லது.
அதேப்போல 'வெஸ்டர்ன்' டாய்லெட்டில் பிளஷ் செய்யும் போது, அதன் மூடி மூடியிருப்பது அவசியமாகும்.
ஏனெனில் அதிலுள்ள பாக்டீரியா 6 அடி உயரம் பரவும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.