பாத்ரூமில் செல்போன் பயன்படுத்துவதால் வரும் ஆபத்து

'டாய்லெட்டில்' செல்போன் பயன்படுத்துவதால் அதிலுள்ள பாக்டீரியா, கிருமிகள், அலைபேசியில் ஒட்டிக் கொள்ளும்.

பின் அதை பயன்படுத்துபவருக்கு வயிற்றுபோக்கு, நுரையீரல் தொற்று உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் ஆபத்துள்ளது என பிரிட்டனின் லீசெஸ்டர் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது.

டாய்லெட்டிலுள்ள கிருமிகள் 8 விநாடிகளில் 5 அடி பரவும்.

டாய்லெட் பயன்படுத்திவிட்டு 'சோப்' மூலம் கைகளை சுத்தம் செய்தாலும், மீண்டும் அலைபேசியை தொடும்போது 'கை'யில் பரவும்.

அதில், 92 % ஈ கோலி, சால்மொனெல்லா போன்ற ஆபத்து விளைவிக்கும் பாக்டீரியாக்கள் படிந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த ஈ கோலி பாக்டீரியா என்பது மலத்திலுள்ள ஒரு கிருமியாகும். உலகளவில் இந்த கிருமியினால் லட்சக்கணக்கானவர்கள் சுகாதார பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.

மேலும், பாத்ரூமில் செல்போனை அதிக சத்தத்துடன் பயன்படுத்தும்போது, காதுகள், பெருங்குடல் அடிவாய் மீது அழுத்தம் உண்டாகிறது.

இதனால் மூல நோய், வாய்வு தொல்லை, பெருங்குடல் அடிவாய் பகுதியிலுள்ள ரத்த நாளங்களில் வீக்கம், சிறுநீர் கழிப்பதில் பிரச்னை ஆகிய பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

எனவே, டாய்லெட்டில் செல்போன் பயன்பாட்டை கைவிடுவதே சிறந்தது என அறிவுருத்தப்பட்டுள்ளது.