குப்பைக்கு செல்லும் கூந்தல்... மேட் ஆக மாறுது !
கூந்தலை மறுசுழற்சி செய்து மேட்டாக மாற்றுவதன் மூலம், தண்ணீர் மாசுபாட்டை குறைக்கலாம் என, பெல்ஜியத்தை சேர்ந்த நபர் ஒருவர் கண்டறிந்துள்ளார்.
நீர் நிலையை அடையும் தண்ணீரில் எண்ணெய் கழிவுகள் இருந்தால், அவற்றை இந்த மேட்டை கொண்டு உறிஞ்ச வைக்க முடியும்.
இதனை வடிகால்களில் பொருத்திவிட்டால், அசுத்தத்தை உறிஞ்சுவிட்டு, தூய தண்ணீரை ஆறுகளுக்கு அனுப்பும் என்பது இவர்களது கண்டுபிடிப்பு.
முன்னதாக இதற்கு பாலி ப்ரொபைலின் பொருளால் ஆன மேட்களை பயன்படுத்தப்பட்டன.
ஒரு மயிரிழை அதன் சொந்த எடையை விட, 10 மில்லியன் மடங்கு எடை வரை தாங்கும். கொழுப்பு மற்றும் ஹைட்ரோகார்பன்களை உறிஞ்சும்.
கூந்தலில் பைபர்கள் இருப்பதால், அது அதிக எலாஸ்டிக் தன்மை கொண்டுள்ளது.
மேலும் பயோ காம்போசைட் பைகளாகவும் இவை மாற்றப்படுவதால், உரமாகின்றன.