துத்திக்கீரையின் ஆரோக்கிய நன்மைகள் இதோ

துத்தி செடியின் இலை, காம்பு, பட்டை, பூ, காய், வேர் என, எல்லாமே மருத்துவ குணங்கள் நிறைந்தது.

லேசான இனிப்பு சுவையுடன் இருக்கும். ஆனால், செடியின் அத்தனை பாகங்களையும் பயன்படுத்த வேண்டும் என்றில்லை. இதன் கொழுந்து இலைகளை பறித்து மென்று முழுங்கினாலே போதும்.

மூலத்திற்கு சிறந்த மருந்து இது. இதன் இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி கட்டிகள் மீது வைத்துக் கட்டினால் கட்டி உடைந்து, அதன் கிருமிகள் இறந்து விடும்.

இலைகளை நிழலில் காயவைத்து, பொடி செய்து, காலை - மாலை 2 வேளை 1 தேக்கரண்டி சாப்பிட்டு, சுடு தண்ணீர் குடித்து வர, மூலம், ரத்த மூலம் போன்றவைக்கு நிவாரணம் கிடைக்கும்.

துத்தி இலைகளை பறித்து தண்ணீரில் கொதிக்க வைத்து, பாலும், சர்க்கரையும் கலந்து குடிக்க, ஆசன வாய் கடுப்பு சரியாகும்; வாய் கொப்பளித்து வர பல்வலி, துர்நாற்றம் நீங்கும்.

ரசம் செய்து அருந்தி வந்தால், சிறுநீரக நோய் பாதிப்புகளை தவிர்க்கலாம்.

எந்த வகையில் துத்தி இலையை உட்கொண்டாலும், உடலின் வெப்பம் குறையக்கூடும்.

இதன் நரம்பு நீக்கிய இலைகளை அரைத்து, இட்லி மற்றும் தோசை மாவில் கலந்து வாரம் இருமுறை பயன்படுத்தலாம்.

துத்தி இலைகளை பிற கீரைகள் சமைக்கும் போது, அதனுடன் ஒரு கைப்பிடி சேர்த்து, கூட்டாய் செய்து சாப்பிடலாம்.