உப்புமாவில் இவ்வளவு நன்மைகளா! இனி உப்புமானா தெறித்து ஓட மாட்டீங்க..!

ரவை, அரிசி மாவு, கோதுமை உள்ளிட்ட வகைகளில் செய்யும் உப்புமாவின் நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

உங்கள் உடல் உப்புமாவை மெதுவாக ஜீரணிக்கிறது. இதனால் நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்த உணர்வு இருப்பதால், நடுவில் நொறுக்குத்தீனிகள் அல்லது மற்ற உணவுகள் சாப்பிடவும் உங்களுக்கு தோன்றாது.

கோதுமை ரவையில் உள்ள வைட்டமின் சத்துக்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் பி மற்றும் இ நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கு வலுச் சேர்க்கும்.

உப்புமா உடலுக்கு ஆற்றல் அளிப்பதை உணவியல் நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர். இதில் காய்கறிகள் சேர்த்து சாப்பிடும் போது உடலுக்கு அதிக அளவு நார்ச்சத்து கிடைக்கிறது.

கோதுமை ரவையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதிலுள்ள செலீனியம் சத்தானது உங்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்.

கோதுமை ரவையில் உள்ள மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் உள்ளிட்ட தாதுக்கள் உங்கள் நரம்பு மண்டலம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவும்.

ரவையில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கும். மேலும் இது உங்கள் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

உப்புமாவில் வேர்க்கடலை, முந்திரி உள்ளிட்ட பல்வேறு பருப்புகளை சேர்த்து சாப்பிடலாம். இதனால் சுவை கூடுவதுடன் சத்துக்களும் அதிகரித்து உடல்நலம் காக்கும்.