எந்தெந்த மாதங்களில் என்னென்ன சிறுதானியங்கள் விதைக்கலாம்?
கம்பு பயிர் குறைந்த நீர்வளம் மற்றும் மண் வளம் உள்ள இடங்களில் செழித்து வளரக்கூடியது. இந்த பயிர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் விதைக்கலாம்.
புரதம், தாதுச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் என ஊட்டச்சத்து கலவையான இந்த கேழ்வரகை விதைக்க நவம்பர், டிசம்பர், செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் உகந்த பருவ காலமாகும்.
தினை சாகுபடி செய்ய, வடிகால்
வசதியுள்ள மணல்பாங்கான மண்வகை ஏற்றது. இதன் சாகுபடி காலம் 3 மாதங்கள். இந்த
பயிரை ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் சிறந்த பருவ
காலமாகும்.
மலைவாழ் மக்களின் முக்கிய பயிர் வகைகளில் ஒன்றான சாமை ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் விதைக்கலாம்.
சிறுதானிய வகைகளில் குறைந்த நாட்களில் அறுவடைக்கு வரும் குதிரை வாலியைப்
பயிர் செய்ய ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் பருவ காலங்கள்
உகந்ததாகும்.
கடும் வறட்சி மற்றும் அதிக மழையைத் தாங்கி வளரும், வரகு தானியத்தை விதைக்க
ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் பருவ காலங்கள் உகந்ததாகும்.
சிறுதானிய பயிர்களில் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் தானியங்களில்
சோளமும் ஒன்று. இதை விதைக்க ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்கள் சரியான பருவ
காலமாகும்.