பெங்களூரு அணி அசத்தல் வெற்றி: கோஹ்லி அரைசதம் விளாசல்
பெங்களூரு: டில்லிக்கு எதிரான பிரிமியர் லீக் போட்டியில் கோஹ்லி அரைசதம் விளாச, பெங்களூரு அணி 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில், பிரிமியர் லீக் கிரிக்கெட் 16வது சீசன் நடக்கிறது. பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, டில்லி அணிகள் மோதின.
பெங்களூரு அணிக்கு விராத் கோஹ்லி, கேப்டன் டுபிளசி ஜோடி நல்ல துவக்கம் கொடுத்து, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 174 ரன் எடுத்தது.
சவாலான இலக்கை விரட்டிய டில்லி அணி, 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 151 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.
ஆட்ட நாயகன் விருதை வென்ற கோஹ்லி, தனது 47வது அரைசதம் விளாசினார். இதன்மூலம் பிரிமியர் லீக் அரங்கில் அதிக அரைசதம் அடித்த வீரர்கள் வரிசையில் 3வது இடத்தில் நீடிக்கிறார்.