ஓய்வு பெறுகிறாரா தோனி? காத்திருக்கும் புதிய ரோல் !
ஐ.பி.எல்., தொடரின் 17 வது சீசன், வரும் 22ல் துவங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி, பெங்களூருவை எதிர்கொள்கிறது.
இப்போட்டிக்குப் பின் தோனி ஓய்வு பெறுவார் என செய்திகள் வெளியாகியுள்ளன. 'சென்னையில் தான் எனது கடைசி போட்டி' என தோனி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இவர் வெளியிட்ட இணையதள செய்தியில்,' புதிய சீசன், புதிய 'ரோல்'... இதற்காக காத்திருக்க முடியவில்லை. பொறுத்திருந்து பாருங்கள்,' என தெரிவித்துள்ளார்.
சென்னை அணி நிர்வாகம் வெளியிட்ட செய்தியில்,' புதிய ரோலில் களமிறங்க காத்திருக்கும் 'லியோ' என தெரிவித்துள்ளது.
இத்துடன் சிங்க முக 'மாஸ்க்' அணிந்த நபரின் புகைப்படமும் பதிவிடப்பட்டுள்ளது.
இதனால் தோனி முதல் போட்டியுடன் விடைபெற்று, சென்னை அணியின் ஆலோசகராக செயல்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தோனிக்கு பதிலாக புதிய கேப்டனாக ஜடேஜா அல்லது இளம் வீரர் ருதுராஜ் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.