சென்னைக்கு பெரிய 'விசில்' அடிங்க... * வசமானது ஏழாவது வெற்றி

இந்தியாவில் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை அணி, டில்லியை சந்தித்தது.

பேட்டிங்' தேர்வு செய்த சென்னை அணிக்கு கான்வே, ருதுராஜ் ஜோடி சுமார் துவக்கம் கொடுத்தது.

அக்சர் படேல் சுழலின், முதல் பந்தில் கான்வே (10) அவுட்டானார்.மீண்டும் வந்த அக்சர் படேல், ருதுராஜை (24) வெளியேற்றினார்.

இந்நிலையில் ஷிவம் துபே (25), ராயுடு (23) அவுட்டாகினர். பெரும் ஆரவாரத்துடன் களமிறங்கினார் தோனி. கலீல் வீசிய 19 வது ஓவரில் தோனி, 2 சிக்சர், 1 பவுண்டரி அடித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றினார்.

கடைசி ஓவரில் ஜடேஜா (21), தோனி (20) அடுத்தடுத்து வெளியேறினர். சென்னை அணி 20 ஓவரில் 167/8 ரன் மட்டும் எடுத்தது.

டில்லி அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தீபக் சகார் வீசிய முதல் ஒவரின் 2வது பந்தில் வார்னர் 'டக்' அவுட்டானார். மிட்சல் மார்ஷ் (5) வீணாக ரன் அவுட்டானார்.

நான்காவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 59 பந்தில் 59 ரன் சேர்த்த போது, பதிரானா 'வேகத்தில்' மணிஷ் பாண்டே (27) அவுட்டானார்.

அக்சர் (21), லலித் (12) நீடிக்கவில்லை. டில்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 140 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.