தோனி படையை சமாளிக்குமா ரோகித் அணி: சென்னை-மும்பை பலப்பரீட்சை

சென்னை அணி முதல் போட்டியில் குஜராத்திடம் வீழ்ந்தது. அடுத்து சுதாரித்துக் கொண்டு, சொந்தமண்ணில் லக்னோவை வீழ்த்தியது.

சென்னை அணிக்கு முதல் இரு போட்டியில் அரைசதம் விளாசிய ருதுராஜ் (92, 57 ரன்), கான்வே (48) ஜோடி நல்ல துவக்கம் தருகிறது.

கேப்டன் தோனியும் ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தேனாக இனிக்கிறார்.

'மிடில் ஆர்டரில்' அம்பதி ராயுடு, மொயீன் அலி, ஷிவம் துபே என ஒவ்வொருவரும் தங்கள் பங்கேற்கிற்கு ரன் சேர்க்க உதவுகின்றனர்.

ஆல் ரவுண்டர்கள்' ஜடேஜா, ஸ்டோக்ஸ் திணறுவது பலவீனம்.

சான்ட்னருக்குப் பதில் கடைசிகட்ட ஓவர்களில் அசத்தும் தென் ஆப்ரிக்காவின் சிசாண்டா சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. சுழலில் மொயீன் அலி (4) நம்பிக்கை தருகிறார்.

ஆடுகளம் பேட்டர்களுக்கு கைகொடுக்கும் என்பதால், தோனி மீண்டும் தனது பாணியில் ஆடினால் சிறப்பாக இருக்கும்.