இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

முதல் போட்டி லண்டன், ஓவல் மைதானத்தில் நேற்று நடந்தது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார்.

தொடையில் லேசான காயம் அடைந்த கோஹ்லிக்கு பதிலாக, ஸ்ரேயாஸ் சேர்க்கப்பட்டார்.

இங்கிலாந்தின் பட்லர் முதன் முறையாக ஒருநாள் போட்டியில் கேப்டனாக களமிறங்கினார்.

ஓவல் ஒருநாள் போட்டியில் வேகப்புயலாக மிரட்டிய பும்ரா 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

மறுபக்கம் தன் பங்குக்கு 3 விக்கெட்களை சாய்த்து மிரட்டினார் முகமது ஷமி.

எளிதான இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு, ரோகித் மற்றும் தவான் ஜோடி அசத்தல் துவக்கம் கொடுத்தது.

இதில், ரோகித் தனது 45வது அரைசதம் கடந்தார்.

விக்கெட் இழப்பின்றி 18.4 ஓவரில், 114 ரன் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. ரோகித் (76), தவான் (31) அவுட்டாகாமல் இருந்தனர்.